ரதயாத்திரை

பசுமைநாயகன் Thagaval
Pasumainayagan  பசுமைநாயகன் Thagaval
Pasumainayagan  பசுமைநாயகன் Thagaval
Pasumainayagan  பசுமைநாயகன் Thagaval



சுற்றுச்சூழல் ரதயாத்திரை

Pasumainayagan  பசுமைநாயகன் Thagaval
Pasumainayagan  பசுமைநாயகன் Thagaval
Pasumainayagan  பசுமைநாயகன் Thagaval
Pasumainayagan  பசுமைநாயகன் Thagaval
Pasumainayagan  பசுமைநாயகன் Thagaval

Pasumainayagan  பசுமைநாயகன் Thagaval

பசுமைநாயகன் Pasumai Nayagan
                                                                       
                         
                 
                   


                                                                                                        - பசுமைநாயகன்

தவசிக்கீரை



       
thavasikeerai Pasumainayagan
       நாம் உண்ணும் கீரைகளியே மிக அதிகமான மருத்துவகுணம் நிறைந்த சத்துள்ள கீரை தவசிக்கீரையாகும். கீரைகளிலே தவசிக்கீரை முதலிடம் வகிக்கிறது. இக்கீரையை தவசிக்கீரை,தவசிமுருங்கைக்கீரை, வைட்டமின் கீரை, மல்டிவைட்டமின் கீரை, பிரஷ்ஷர் கீரை என்றும் கூறுவார்கள். ஏன்என்றால் தவசிக்கீரையில் அடங்கியுள்ள வைட்டமின்கள் சிறந்த மருத்துவப்பயனை  விளைவிக்ககூடியதாக   இருக்கின்றன.
   தவசிக்கீரையில் வைட்டமின் A, B, B2, C, D, K ஆகிய வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன.அதனால் இக்கீரையை மல்டி வைட்டமின் கீரை என்று அழைக்கிறார்கள். தவசிக்கீரையை பச்சையாக உண்ணலாம். களைப்பாக இருக்கும் போது ஐந்து, ஆறு இலைகளை பச்சையாக 
மென்று தின்றால் களைப்பு நீங்கும், புத்துணர்வு ஏற்படும். 

            தவசிக்கீரை பற்றி மேலும் அரிய “இயற்கை விவசாய தகவல்தளம்” எனும் புத்தகத்தை வாங்கி படியுங்கள் 

  மேலும் இயற்கை விவசாய முன்னோடிகள் - இயற்கை விவசாயிகள் - இயற்கை அங்காடிகள் - விநியோகஸ்தர்கள் - சிறுதானியங்கள் - பாரம்பரிய நெல் ரகங்கள் - பாரம்பரிய விதை நெல் காப்பாளர்கள் -
பாரம்பரிய நெல் அரிசியின் மருத்துவகுணங்கள் - நம்நாட்டுக்கீரைகள் - வல்லுநர்கள் - இயற்கை விவசாய பாரம்பரிய உத்திகள் - மூலிகைகள் - விதை மற்றும் நாற்றுக்கள் - இயற்கை வாழ்வியல் முறை -போன்ற எண்ணற்ற தகவல்களை கொண்ட புத்தகம் "இயற்கை விவசாய தகவல்தளம்" 
  
தொடர்புக்கு : Email : pasumai4u@gmail.com
செல் : 98412 43995 
                                                                                                    -பசுமைநாயகன்

              
thagaval Pasumai4u

Pasumai4u  thagavalthalam

Pasumai4u thagaval

Pasumai4u Pasumai Nayagan thagavalthalam

பசுமைநாயகன் Pasumai Nayagan thagavalthalam
                                                                                  
Organic Farming வீட்டு தோட்டம் thagavalthalam

சுற்றுச்சூழல் ரதயாத்திரை



பசுமைநாயகன் Pasumainayagan
சுற்றுச்சூழல் ரதயாத்திரை  Pasumai Nayagan
பசுமைநாயகன் Thagaval Pasumainayagan

                மரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்... வெறுமை என்ற ஒற்றைச்சொல்தான் எழும்பும். மரங்கள் இல்லாவிட்டால் சுத்தமான காற்று கிடையாது.. வீடுகள் முழுமையடையாது... காகிதங்கள் கிடையாது.. நாற்காலிகள் கிடையாது.. மரச்சாமான்கள் இல்லை... நேரடியாகவோ, மறைமுகமாகவோ மரங்கள் நம் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்திருக்கின்றன.. ஆனால் அவற்றை நாம் பொருட்டாக மதிப்பதில்லை.. ஒரு மரம் மரித்தால்.. பின்னொரு மரம் அதே அளவில் செழித்து வளர எத்தனை ஆண்டுகாலம் பிடிக்கும்? அதுவரை அந்த மரம் இயற்கைக்கு அளித்த பங்களிப்பை யார் ஈடு செய்வது? 




 Pasumainayagan பசுமை நாயகன்



10ம் நாள் சுற்றுச்சூழல் ரதயாத்திரையில் 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மாணவர் படை (NCC Camp)ல் அதிகாரிகளுடன் மரம் நடவு செய்த போது எடுத்தப்படம். 

சுற்றுச்சூழல் பசுமைநாயகன் thagaval


மரம் நடும் வேகத்தை விட, மரம் வெட்டும் வேகம் அதிகமாக இருக்கிறது. 
உலக உயிர்களுக்கான உணவு சமைக்கும் கேந்திரமே மரம்தான். இதோ நாமும் சில மரங்களை நடவு செய்ய வாயுப்புகளை ஏற்படுத்திக்கொள்வோம் உலக வெப்பத்தை குறைப்பதற்கு. நாம் மனிதனாக இந்த பூமியில் மரக்கன்றுக்களை நட்டு நம் கண்களால் அடுத்த தலைமுறையின் வாழ்வைக் காணக்கூடிய அடையாளச் சின்னங்களாக மரங்களை விட்டு (நட்டு) செல்வோம். எங்களுக்கு மரம் நட இடம் இல்லை 
என்று கூறுபவர்கள் எங்கள் அறக்கட்டளைக்கு 
 
Pasumai4u என்ற பெயரில் பணம் செலுத்தினால் நாங்கள் மரம் நடவு செய்து, நடவு செய்ததற்கான சான்றிதழம் (Certificate) அளிக்கின்றோம்.


http://www.thagavalthalam.com
பசுமை நாயகன்
09941681652
mail : pasumai4u@gmail.com

மரங்களைப்பற்றி கொஞ்சம் பகிர்ந்து கொள்வோமா?

                              நடக்க நடக்க விரியும் பாதை... இருபுறமும் செழித்து தழைக்கும் மரங்கள்... மரங்களில் பூத்துக்குலுங்கும் மலர்கள்.. பழங்கள்.. மரங்களில் எட்டிப்பார்த்து கீச்சிடும் பறவைகள்... கொஞ்சும் மாலை வெயில்... மென்நடை...
இத்தனை இனிமையாக ஒரு நடைபயணம் இருக்க முடியுமா? எங்கோ ஒரு கிராமத்தில் இந்த காட்சிகள் கை கூடக்கூடும்....ஆனால்... அன்பாலும்... காதலாலும் பொங்கி பெருகும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும்... மனதிற்குள்ளும் கவித்துவமாக ஒரு காட்சி விரியும் என்றால் அதில் மரங்களுக்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு..

      அந்த மரங்களைப்பற்றி கொஞ்சம் பகிர்ந்து கொள்வோமா? மரங்களின் மீதான அன்பும், அவற்றுடனான நட்பும் இன்று நேற்றில்லை... நினைவு தெரிந்த நாள் முதல் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எனக்கும் இருக்கிறது...
இளநிலை படித்த கல்லூரியில் நிறைய பெரிய மரங்கள்... வயதான மரங்கள் இருந்தன.. இன்னமும் இருக்கின்றன. அவற்றை இரு கைகளால் கண்டிப்பாக பிடிக்க முடியாது.. அத்தனை பெரிது... பெயர் தெரியா மரங்கள்... புங்கை... கொன்றை.. சரக்கொன்றை... எத்தனை எத்தனையோ மரங்கள்..
முதுநிலை இதழியல் படித்த கல்லூரியிலோ பெரிய வனமே ஒளிந்திருந்தது..மரங்களின் கூட்டத்திற்கிடையேதான் வகுப்புக்கான நடை பயணம்.. நடக்க நடக்க இலைகள் உதிர்ந்து கொண்டே இருக்கும்..பசுமை படர்ந்து கொண்டே இருக்கும்.. அங்கு பல மூலை முடுக்குகளை நான் பார்த்ததே இல்லை... அது ஒரு முடிவில்லா மர்ம முடிச்சாக நீண்டு கொண்டே இருக்கும் வனம்.. அங்கு இல்லாத மரங்களே இல்லை... மனிதர்களை விட மரங்கள் மிஞ்சிய வனம் அது.. அந்த சூழல் சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு மட்டுமே சாத்தியமான மிக அழகான சூழல்.. சென்னையை ஒட்டிய தாம்பரத்தில் அப்படி ஒரு வனமும்.. அதற்குள் ஒரு கல்லூரியும் இருக்க முடியுமா என்ற ஆச்சரியம் இருந்தது. ...
   ந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது.. ஒவ்வொரு மரமும் எத்தனையோ ஆயிரம் பேரை.. லட்சம் பேரை பார்த்துவிட்டன. இருந்த இடத்தில் இருந்து நகராமல் வானுக்கும் மண்ணுக்கும் ஒரு மறைமுக பாதையாக இருக்கும் மரங்கள் மழையை பெய்ய வைப்பதிலும்.. ஆரோக்கியமான சுற்றுச்சூழலை தருவதிலும் பெரும் பங்காற்றுகின்றன.
      ப்படிப்பட்ட மரங்களில் கிட்டதட்ட ஆயிரம் மரங்கள் அண்மையில் சென்னையில் மரணித்தன. நீலம் புயல் ஆயிரம் மரங்களை வேரறுத்து வீசிவிட்டது. பெரிய பாதிப்பில்லை என்றுபேசப்பட்ட அந்த புயல், ஆயிரம் மரங்களை சாய்த்துவிட்டன. ஆனால் அவற்றால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை பற்றித்தான் பேசினோம்... மரங்களின் மரணம் பற்றி யாரும் பேசவில்லை.. இத்தனை மரங்களின் இழப்பால் இயற்கை சூழலுக்கு ஏற்பட்ட வெறுமை பற்றி பேசவேயில்லை...
  துமட்டும்தானா? தானே புயல் வேரறுத்த மரங்கள் பல்லாயிரம்.. சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்கள் நூற்றுக்கணக்கில்... மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் யாரோ விஷமிகள் வைத்த தீயில் பற்றி எரிந்தது பல்லாயிரம் மரங்கள்.. அதில் எத்தனை எத்தனையோ மூலிகை மரங்கள்.. வயதான மரங்கள்..பச்சை குருத்துக்கள்.. கண்ணுக்கு தெரிந்து இத்தனை இழப்புகள்... அவற்றை எப்படி ஈடுகட்டினோம்.? எத்தனை மரங்கள் புதிதாக நடப்பட்டன.? விடை மிக மிகச் சொற்பம்தான்
   மரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்... வெறுமை என்ற ஒற்றைச்சொல்தான் எழும்பும். மரங்கள் இல்லாவிட்டால் சுத்தமான காற்று கிடையாது.. வீடுகள் முழுமையடையாது... காகிதங்கள் கிடையாது.. நாற்காலிகள் கிடையாது.. மரச்சாமான்கள் இல்லை... நேரடியாகவோ, மறைமுகமாகவோ மரங்கள் நம் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்திருக்கின்றன.. ஆனால் அவற்றை நாம் பொருட்டாக மதிப்பதில்லை.. ஒரு மரம் மரித்தால்.. பின்னொரு மரம் அதே அளவில் செழித்து வளர எத்தனை ஆண்டுகாலம் பிடிக்கும்? அதுவரை அந்த மரம் இயற்கைக்கு அளித்த பங்களிப்பை யார் ஈடு செய்வது?
தொழிற்சாலைகளுக்காகவும்.. வீடுகளுக்காகவும் வெட்டப்படும் மரங்கள் ஈடு செய்யப்படுவதில்லை.. மண் சுவாசிக்க மரம் வேண்டும்.. பூமி குளிர மண் வேண்டும்.. மாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்... மழை கிடைக்கவும் மரம்தான் வேண்டும்..
ஒரு செடி வளர்த்து பாருங்கள்.. முளைவிடும் நேரம் தொடங்கி முதல் தளிர் துளிர்க்கும் வரை ஒவ்வொரு தருணமும் நமக்கு அளிக்கும் மகிழ்ச்சியை அளவிடவே முடியாது.. நாம் நட்ட செடியில் பூக்கும் முதல் பூ தரும் நெகிழ்ச்சி பிரசவித்த குழந்தையின் முகம் பார்க்கும் மகிழ்ச்சிக்கு ஈடாக சொல்லலாமா? அந்த மகிழ்ச்சியை இனியாவது கொண்டாடுவோம்.. அனுபவிப்போம்..